உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கச்சிராயிருப்பை கண்டு கொள்ளாத பஸ்கள்

கச்சிராயிருப்பை கண்டு கொள்ளாத பஸ்கள்

சோழவந்தான் : சோழவந்தான் அருகே கச்சிராயிருப்புக்கு இயக்கப்பட்டு வந்த பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். அப்பகுதி செந்தில்குமார் கூறியதாவது: இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணியாளர்கள், தினக்கூலிகள் இங்கிருந்து வெளியூருக்கு செல்கின்றனர். முன்பு இங்கிருந்து பெரியார் நிலையத்திற்கு காலை 8:00 மணி, மாலை 7:00 மணி என இரு முறை பஸ்கள் இயக்கப்பட்டது. அவை ஓராண்டுக்கு மேலாக நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் 1.5 கி.மீ., நடந்து சென்று கச்சிராயிருப்பு பிரிவில் பஸ் ஏற வேண்டியுள்ளது. பள்ளி, கல்லுாரி செல்வோர் சிரமம் அடைகின்றனர். இரவு நேரங்களில் ஊருக்குள் நடந்து வரும் வழியில் போதிய விளக்கு வெளிச்சம் இல்லை. இரு புறமும் கண்மாய் உள்ளதால் விஷ ஜந்துக்கள், தெரு நாய்களால் ஆபத்து உள்ளது. பிரிவு ரோட்டில் விளக்குகள் இல்லாததால் பெண்கள், குழந்தைகள் அஞ்சுகின்றனர். அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை