உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை தமுக்கத்தில் இன்று வாங்க புத்தகம் வாங்க

மதுரை தமுக்கத்தில் இன்று வாங்க புத்தகம் வாங்க

ராமாயண மகாகாவியம்

(வான்மீகி-கம்பன் ஒரு ஒப்பீடு) பாகம்-5

ஆசிரியர் : வா.ஜானகிராமன் வெளியீடு : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட் விலை : ரூ.780 இந்நுாலில் ராமாயணத்தை வான்மீகி-கம்பன் கையாண்ட விதத்தை எடுத்துரைக்கிறார் ஆசிரியர் வா.ஜானகிராமன். காளிதாசரையும் ஒப்பிட்டுள்ளது சிறப்பு. உதாரணமாக கம்பர் ராமாயணத்தை யுத்த கண்டத்துடன் நிறைவு செய்வதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். எத்தனை முறை படித்தாலும் ராமாயணத்தில் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன என்பது இந் நுாலை படித்த பிறகு உணருகிறோம்.

நிரந்தர தெய்வீக வழிகாட்டல்

(பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா

பக்தர்களின் அனுபவத்தொகுப்பு)

ஆசிரியர் : டாக்டர்.வி.மோகன் வெளியீடு : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட் விலை : ரூ.440 சத்ய சாய்பாபாவின் வல்லமையையும், இரக்கத்தையும் பக்தர்களின் வழியே சொல்லப்பட்டிருப்பது சிறப்பு. சுவாமியின் தெய்வீக அன்பை எப்படி பெற்றார்கள் என எளிமையாக எழுதப்பட்டுள்ளது. தெய்வத்தின் மீதான அன்பே உண்மையானது போன்ற பாபாவின் வரிகள் அத்தியாயத்தின் துவக்கத்தில் இடம்பெறுவது அருமை.

விமர்சனப் பதிவுகள்

இலக்கியம் - சமூகம் - மேலாண்மை

ஆசிரியர் : சி.சரவணஜோதி வெளியீடு : யாவரும் பதிப்பகம் விலை : ரூ.190 சிறுபஞ்சமூலம் கட்டமைக்கும் ஒழுக்கவியல், யதார்த்த வாழ்வியல் நெறிமுறைகளை விளக்கியுள்ளார் ஆசிரியர் சி.சரவணஜோதி. மேலாண்மை தலைப்பில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய சமுதாய எண்ணப்போக்கை படம் பிடித்து காட்டியிருப்பது சிறப்பு.

கனவுப் படிக்கட்டுகள்

ஆசிரியர் : அந்திமழை இளங்கோவ ன் வெளியீடு : அந்திமழை விலை : ரூ.200 இளங்கோவனின் கட்டுரைகளை தேர்ந்தெடுத்து தொகுப்பாக வந்துள்ளது. 'மீனும், மிதிவண்டியும்', 'தீபாவளி சினிமா', 'தொப்பை அழகுதான்' போன்ற கட்டுரைகள் நம் மனதில் நீங்கா இடம்பிடிக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையின் பின்பும் ஏராளமான உழைப்பு இருப்பதை உணர முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி