உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பயிர் காப்பீடு செய்ய வாங்க...

 பயிர் காப்பீடு செய்ய வாங்க...

வாடிப்பட்டி: வாடிப்பட்டி வட்டார விவசாயிகள் சிறப்பு ராபி பருவத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என வேளாண் துறை உதவி இயக்குனர் பாண்டி தெரிவித்தார். அவர் தெரிவித்துள்ளதாவது: சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ளவர்கள் சிட்டா, அடங்கல், வங்கி பாஸ்புக், ஆதார் அட்டை கொண்டு இ-சேவை மையத்தில் காப்பீடு செய்யலாம். இதன் மூலம் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் மகசூல் இழப்பீட்டில் இருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். தேசிய, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெறும் விவசாயிகள், வேளாண் நகை கடன் பெறாத விவசாயிகள் இத்திட்டத்தில் இணையலாம். நெல் சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ.540 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாள் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை