அழைத்தது 400; பதில் அளித்தது 10
மதுரை : மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதில் தனியார் நிறுவனங்களிடையே ஆர்வம் குறைவாக உள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு, பயிற்சி வழங்குவதற்காகவே ஆலோசனை மையம் ஒன்று தற்போது கலெக்டர் அலுவலகத்தில் துவக்கப்பட்டுள்ளது. டி.வி.எஸ்., நிறுவனம், ரீஆக்ட் தொண்டு நிறுவனம் சார்பில் துவங்கப்பட்ட இம்மையத்தில் 2 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்பு எண்: 87789 45248.இதேபோல மாவட்ட அளவில் 400க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களை வரவழைத்து 'மெகா முகாம்' நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இ- மெயில், வாட்ஸ் அப் என பலவழிகளிலும் தொடர்பு கொண்டு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்து வருகிறது. ஆனால் நிறுவனங்களிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. இதுவரை 10 நிறுவனங்களே முகாமில் பங்கேற்பதாக பதில் தெரிவித்துள்ளன.