திறனை வளர்க்கும் அமைப்பு துவக்கம்
மதுரை : மதுரை பாத்திமா கல்லுாரியில் தர மேம்பாடு, மாணவர்கள் முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில் 'குவாலிட்டி சர்க்கிள்' எனும் அமைப்பு துவங்கப்பட்டது. துணை முதல்வர் அருள் மேரி தலைமையில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் அருள் தீபா, சண்முக பிரியா துவக்கி வைத்தனர். எம்.பி.ஏ., துறை உதவிப் பேராசிரியர் சுகன்யா, மாணவர்களின் தலைமைத்துவம், படைப்பாற்றல், கல்விச் சிறப்பை மேம்படுத்துவதில் அமைப்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். அவர், ''நிறுவன சவால்களை அடையாளம் காண்பது, புதுமையான தீர்வுகளை உருவாக்குவது, கல்வி, வளாக செயல்பாடுகளின் தரத்தை மேம்படுத்த வழக்கமான பட்டறைகள், கூட்டங்களை நடத்துவதில் இவ்வமைப்பு கவனம் செலுத்தும்'', என்றார்.