மேலும் செய்திகள்
ரூ.55 லட்சம் செலவில் வேளாண் இயந்திரங்கள் வழங்கல்
28-Jun-2025
மதுரை : வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் ஒத்தக்கடை அருகே நெல்லியேந்தல்பட்டி அரசு இயந்திர கலப்பை பணிமனையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு குறித்த முகாம் நடந்தது. வேளாண் துணை இயக்குநர் சாந்தி குத்துவிளக்கேற்றினார். செயற்பொறியாளர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். வேளாண், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர்கள் மேரி ஐரின் ஆக்னட்டா, பிரபா, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்கள் ராஜன், ஜெகதீசன், நாகராஜன் பங்கேற்றனர். விவசாய கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. விவசாயிகள், விவசாய கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
28-Jun-2025