உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவர் மீது வழக்கு

அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவர் மீது வழக்கு

பேரையூர்; பேரையூர் தாலுகா லட்சுமிபுரம் சிவபெருமாள் மனைவி ஜானகி. இவர் டிகிரி முடித்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த குமரேசன், சென்னை தலைமைச் செயலகத்தில் வேலை பார்ப்பதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில் ஜானகிக்கு மருத்துவத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 4 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்துள்ளார். ஜானகி குடும்பத்தினர் தொடர்ச்சியாக குமரேசனிடம் கேட்டுள்ளனர். இதையடுத்து மருத்துவ காப்பாளர் பணி நியமன ஆணையை குமரேசன் கொடுத்துள்ளார். போலி நியமன ஆணை என அறிந்த ஜானகி , பேரையூர் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை