உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பட்டாசு கழகம் அமைக்க வழக்கு

பட்டாசு கழகம் அமைக்க வழக்கு

மதுரை: தமிழகத்தில் பட்டாசு உற்பத்தி தொழிலை ஒழுங்குபடுத்த பட்டாசு கழகம் அமைக்க தாக்கலான வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் 450 பதிவு செய்த பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. நேரடியாக 40 ஆயிரம் பேர், மறைமுகமாக ஒரு லட்சம் பேர் வேலை செய்கின்றனர். சரியான கண்காணிப்பு இன்றி உற்பத்தி நடக்கிறது. 2024 முதல் 2025 ஆகஸ்ட் வரை பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் 77 பேர் இறந்துள்ளனர். பெரிய நிறுவனங்கள் தங்கள் பெயர்களில் பட்டாசுகளை சந்தையில் விற்பனை செய்கின்றன. அவை உண்மையில் ஒப்பந்த அடிப்படையில் உரிமம் இல்லாத சிறு யூனிட்கள் மூலம் உற்பத்தியை மேற்கொள்கின்றன. அங்கு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் விபத்துகள் ஏற்படுகின்றன. பட்டாசு தொழிலை ஒழுங்குபடுத்த தமிழக பட்டாசு கழகம் அமைக்க வேண்டும். தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தீ விபத்துகள், சட்டவிரோத பட்டாசு உற்பத்தியை தடுக்க ஒருங்கிணைந்த கொள்கையை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு, 'இதுபோல் நிலுவையிலுள்ள மற்ற வழக்குகளுடன் சேர்த்து இன்று (செப்.,23) விசாரிக்கப்படும்,' என தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை