உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயிலில் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு

கோயிலில் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு

மதுரை: நாகர்கோவில் குமரேசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: வடிவீஸ்வரத்தில் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இதன் வடக்கு மற்றும் மேற்கு ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. தேரோட்டத்தின் போது இடையூறு ஏற்படுகிறது. கலெக்டருக்கு புகார் அனுப்பினோம். ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சேவியர் ரஜினி ஆஜரானார். நீதிபதிகள் கலெக்டர், நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர், அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.,4க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ