உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் உண்ணாவிரதம்

சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் உண்ணாவிரதம்

மதுரை: பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. சென்னையில் நடக்கும் 72 மணி நேர உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக நடந்த இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குப்புஜோதிகுமார் பேசுகையில், ''தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இத்திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட புதிய அலுவலர் குழுவை திரும்பப் பெற வேண்டும். பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்'' என்றார். வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில துணைத் தலைவர் மாரியப்பன், மாநகராட்சி அனைத்துத்துறை அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் முனியசாமி, அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட தலைவர் சின்னப்பொண்ணு, மாநில துணைத் தலைவர் நுார்ஜகான், இயக்க நிர்வாகிகள் சோலையன், வேல்முருகன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை