உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்தில் உபகோயில்களுக்கு ஏப்.16ல் கும்பாபிஷேகம் அறங்காவலர் குழுத் தலைவர் தகவல்

குன்றத்தில் உபகோயில்களுக்கு ஏப்.16ல் கும்பாபிஷேகம் அறங்காவலர் குழுத் தலைவர் தகவல்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயில்களான சொக்கநாதர், பழநிஆண்டவர், குருநாதசுவாமி அங்காள பரமேஸ்வரி, பாம்பலம்மன் கோயில்களுக்கு ஏப். 16ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. மேற்கண்ட கோயில்களுக்கான கும்பாபிஷேக திருப்பணிகளை அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம்,பொம்மை தேவன், ராமையா சொந்த செலவில்செய்து வருகின்றனர். உபகோயில்களில் காசிவிசுவநாதர் கோயில் தவிர்த்து மற்ற 4 உப கோயில்களுக்கும் ஏப்.16ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.ஏப். 14ல் பழநி ஆண்டவர் கோயில், சொக்கநாதர் கோயிலில் யாகசாலை பூஜைகளும், மூலவர்களுக்கு மருந்து சாத்துப்படி செய்யும் பணியும் நடக்கிறது. ஏப்.15ல் குருநாதசுவாமி அங்காள பரமேஸ்வரி கோயில், பாம்பலம்மன் கோயில்களில் யாகசாலை பூஜைகளும், மூலவர்களுக்கு மருந்து சாத்தும் பணியும் நடக்கிறது. ஏப்.16ல் கும்பாபிஷேகம் நடக்கிறது என அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ