உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செக்போஸ்ட் திறப்பு

செக்போஸ்ட் திறப்பு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி - ஆண்டிபட்டி இடையே மலைக்கணவாய் ரயில்வே கிராசிங் பகுதியில் போலீஸ் செக்போஸ்ட் இயங்கி வந்தது. ஏற்றமான மலைப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டதால் போக்குவரத்து நெரிசலும், மலையேற்றத்தில் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு சிரமமும் ஏற்பட்டது. இதனால் கணவாய் மலையடிவாரத்தில் செட்டியபட்டி ஸ்ரீரங்காபுரம் விலக்கு அருகே உசிலம்பட்டி தாலுகா போலீஸ் ஸ்டேஷன் சார்பில் புதிய செக்போஸ்ட் அமைக்கப்பட்டது. எம்.எல்.ஏ., விஜய் திறந்து வைத்தார். டி.எஸ்.பி., ஜெயகணேசன், தாலுகா இன்ஸ்பெக்டர் வனிதா, எஸ்.ஐ., லீலாவதி, போலீசார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை