உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு முதல்வர், தலைவர்கள் மரியாதை

கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு முதல்வர், தலைவர்கள் மரியாதை

மதுரை: மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அவரது ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தேவர் ஜெயந்தி, குருபூஜையை முன்னிட்டு கோரிப்பாளையம் சிலைக்கு காலை 8:10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தந்து மாலை அணிவித்தார். பின் அவரது உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் பெரியசாமி, சாத்துார் ராமசந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, தியாகராஜன், கண்ணப்பன், பெரியகருப்பன், மகேஷ், ராஜா, கீதா ஜீவன், கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ம.தி.மு.க., சார்பில் தலைமை நிலைய செயலாளர் துரை தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏ., பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பா.ஜ., சார்பில் மத்திய இணை அமைச்சர் முருகன், ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் எச்.ராஜா, பொதுச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். முருகன் கூறுகையில், பிரதமர் மோடி சார்பில் மரியாதை செலுத்தினோம் என்றார்.காங்., சார்பில் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நகர் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தே.மு.தி.க., சார்பில் விஜய பிரபாகரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நகர் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, த.மா.கா.,சார்பில் நகர் தலைவர் ராஜாங்கம், பா.ம.க., சார்பில் கவுரவ தலைவர் மணி உட்பட பல்வேறு அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். சசிகலா வருகையின்போது அவரது ஆதரவாளர்களை போலீசார் அனுமதிப்பதில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பார்வையிட்டார். செய்தித்துறை இணை இயக்குநர் பாஸ்கரன், பி.ஆர்.ஓ.,க்கள் சாலிதளபதி, மகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல்வர் உட்பட அனைத்து தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.திருநகரில் முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்த இல்லத்தில் அவரது படத்திற்கு காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் எம்.பி., தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., சார்பில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமையில் இளைஞரணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன், நிர்வாகிகள் செல்வகுமார், பாலமுருகன், பாலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க., சார்பில் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா, கவுன்சிலர் இந்திராகாந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பழனிசாமி மரியாதை

அ.தி.மு.க., சார்பில் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா, மேற்கு மாவட்ட செயலாளர் உதயகுமார், மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன், பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ