உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்

குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்

மதுரை: மதுரை மாநகராட்சி 3வது மண்டலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் தலைவர் பாண்டிச்செல்வி தலைமையில் நடந்தது.உதவிகமிஷனர் சுரேஷ்குமார், நிர்வாக அலுவலர் மணி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளரான இளைஞர் நீதி குழும உறுப்பினர் பாண்டியராஜா, குழந்தைகளின் பாதுகாப்பு பராமரிப்பு, குழந்தை திருமணத்தை தடுத்தல், மண்டபங்களில் மணப்பெண்ணின் வயது சான்று குறித்த ஆவணங்களை பராமரிக்க வேண்டும் என்றார்.பாதுகாப்பு அலுவலர் டயானா, ஆசிரியைகள் சுதா, ஜெயலட்சுமி, அங்கன்வாடி பணியாளர் மலர்விழி, மாணவியர்கள் பாவனா, ராஜபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை