வாடகை கட்டடத்தில் வாடும் குழந்தைகள்
பேரையூர்: பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே அங்கன்வாடி மையம் சேதமடைந்து இருப்பதால் வாடகை வீட்டில் போதுமான வசதிகள் இன்றி குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.அங்கன்வாடி கட்டடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் சேதம் அடைந்து போனது. எனவே தற்காலிகமாக அருகேயுள்ள வாடகை வீட்டில் வைத்து பணியாளர்கள் குழந்தைகளை பராமரிக்கின்றனர். வாடகை வீட்டில் போதுமான வசதி இல்லை. எனவே குழந்தைகள் அவதிப்படுகின்றனர். குழந்தைகளின் நலன் கருதி டி.கல்லுப்பட்டி ஒன்றிய அதிகாரிகள் புதிய அங்கன்வாடி கட்டடத்தை விரைவாக கட்ட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.