உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கால்நடைகளின் இருப்பிடமாகிய சிறுவர் விளையாட்டு மைதானம்

கால்நடைகளின் இருப்பிடமாகிய சிறுவர் விளையாட்டு மைதானம்

பேரையூர்,: டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டி யூனியன் 72 ஊராட்சியில் இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட விளையாட்டு திடல்கள் பராமரிப்பின்றி வீணாகி விட்டன. சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது.கடந்த 2006-11 தி.மு.க., ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விளையாட்டு திடல் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அதில் இளைஞர்கள் பயிற்சி பெறும் வகையில் உடற்பயிற்சி கம்பிகள், சிறுவர் விளையாடி உபகரணங்கள் அமைக்கப்பட்டன. அதேசமயம் தடுப்புச் சுவர், கம்பி வேலி அமைக்கவில்லை. இதனால் பயன்பாட்டுக்கு வந்த சில மாதங்களிலேயே திட்டமும் வீணாகிப் போனது.சிறுவர்கள் விளையாட்டுத்திடல் கால்நடைகளை கட்டி வைக்கும் இடமாக மாறியது. இதனால் சிறுவர்கள் விளையாட முடியாமல் முடங்கியுள்ளனர். மர்மநபர்கள் கம்பிகளை உடைத்து எடைக்கு போட்டுள்ளனர். உபகரணங்களை சேதப்படுத்தியுள்ளனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைக்கப்பட்ட முட்புதர் சூழ்ந்த இந்த விளையாட்டு மைதானங்களில் உள்ள பொருட்கள் பராமரிப்பின்றி வீணாகி வருகின்றன. விளையாட்டு மைதானத்தை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். காட்சிப்பொருளான விளையாட்டு மைதானங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை