உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நோய் தாக்குதலால் நெல் மகசூல் பாதிப்பு சோழவந்தான் விவசாயிகள் சோகம்

நோய் தாக்குதலால் நெல் மகசூல் பாதிப்பு சோழவந்தான் விவசாயிகள் சோகம்

சோழவந்தான் : சோழவந்தான் அருகே தென்கரை கண்மாய் பாசனத்தில் பயிரிட்ட நெற்பயிர்கள் நோய் தாக்குதலால் பாதித்து ஏக்கருக்கு ஒரு மூடை மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.தென்கரை, ஊத்துக்குளி, நாராயணபுரம் பகுதிகளில் 1,500 ஏக்கர் வரை பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் 55 நாட்களில் வினோத நோய் பாதிப்பிற்கு உள்ளானது. இதனை தொடர்ந்து பயிரை காப்பாற்ற விவசாயிகள் எடுத்த முயற்சிகள் கூடுதல் செலவை மட்டுமே ஏற்படுத்தியது. அவர்களின் முயற்சி எதுவும் பயனளிக்கவில்லை. நெற்பயிர்கள் கதிர் விடும் பருவத்தில் பால் பிடிக்காமல் ஆரஞ்சு நிறமாகி பதராகிவிட்டது.ஊத்துக்குளி விவசாயி கார்த்தி கூறியதாவது: வெயில், மழை என பருவம் தவறி ஏற்பட்ட சூழல் காரணமாக பல ஆண்டுகளுக்குப் பின் இதுபோன்ற நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் 75 சதவீதம் அறுவடை முடிந்த நிலையில் ஒரு ஏக்கருக்கு 35 மூடைகளுக்குப் பதில் ஒன்று முதல் அதிகபட்சமாக 8 மூடை வரையே மகசூல் கிடைத்துள்ளது. உழவு, நடவு, கூடுதல் உரம் துவங்கி அறுவடை வரை ஏராளமாக செலவு செய்தும், ஏக்கருக்கு ரூ.60 ஆயிரத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ