உள்ளூர் செய்திகள்

சினிமா

நடிகர் லொள்ளு சபா ஆண்டனி காலமானார்'லொள்ளு சபா' 'டிவி' நிகழ்ச்சியில் சந்தானத்துடன் நடித்தவர் ஆண்டனி . பின்னர் சந்தானத்துடன் சினிமாவிலும் சில படங்களில் நடித்தார். சில ஆண்டுகளுக்கு முன் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். அவருக்கு சந்தானம் மற்றும் லொள்ளு சபா நடிகர்கள் உதவினர். உடல்நிலை மோசமடைந்த நிலையில் நேற்று காலை சென்னையில் அவரது உயிர் பிரிந்தது.ராஜமவுலியுடன் இணையாதது ஏன்: சிரஞ்சீவி பதில்தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி இப்போதும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக படங்களில் நடித்து வருகிறார். ராஜமவுலி படத்தில் நடிக்காதது பற்றிய கேள்விக்கு ராஜமவுலி ஒரு படத்திற்கு இரண்டு, மூன்று ஆண்டுகள் எடுத்து கொள்கிறார். என்னால் ஒரே படத்தில் அவ்வளவு காலம் நடிக்க முடியாது. நான் ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறேன். அதனால் தான் அவருடன் பணியாற்ற முடியவில்லை என்றார் சிரஞ்சீவி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !