உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செம்மொழி நாள் போட்டி அறிவிப்பு

செம்மொழி நாள் போட்டி அறிவிப்பு

மதுரை: அரசு சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான செம்மொழி நாள் விழா போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதில் 'செம்மொழியின் சிறப்பு மற்றும் கருணாநிதியின் தமிழ்த்தொண்டின் பெருமை' என்ற பொருள் சார்ந்த தலைப்புகளில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடக்க உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு மே 9, கல்லுாரி மாணவர்களுக்கு மே 10ல் போட்டி நடக்கும். அரசு, தனியார், மெட்ரிக் பள்ளி மற்றும் அனைத்து கல்லுாரி மாணவர்களும் பங்கேற்கலாம். முதல் 150 விண்ணப்பதாரர்களே அனுமதிக்கப்படுவர்.முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3ம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். பங்கேற்பாளர் அனைவருக்கும் சான்றிதழ் உண்டு. இதுதொடர்பாகஉதவியாளர் சங்கமித்ராவை 89405 18555ல் தொடர்பு கொள்ளலாம்.tamilvalarchithurai.tn.gov.inஎன்ற இணைய தள முகவரியையும் அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி