உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒத்தக்கடையில் துாய்மைப்பணி துவக்கி வைப்பு

ஒத்தக்கடையில் துாய்மைப்பணி துவக்கி வைப்பு

மதுரை: தமிழகத்தின் துாய்மை இயக்கம் 2.0 திட்டம் சார்பில் கழிவு சேகரிப்பு இயக்கத்தின் கீழ் ஒத்தக்கடை பகுதி துாய்மைப் பணியை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். அருகில் உள்ள 13 கிராமங்களில் 4.5 கி.மீ., நீளத்தில் உள்ள 360 தெருக்களை 500 துாய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்தனர். பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்ற னர். கலெக்டர் பிரவீன் குமார் கலந்து கொண்டார். தொடர்ந்து சத்திரப்பட்டி மேல்நிலைப் பள்ளியில் நடந்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமின் திட்ட அரங்கை பார்வையிட்டார். 5 காச நோயாளிகளின் குடும்பத்தினருக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகம், அமைப்பு சாரா தொழி லாளர்களுக்கு தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி