உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையை மிரட்டும் மேகங்கள்

மதுரையை மிரட்டும் மேகங்கள்

மதுரை : மதுரையில் மழை வருவதுபோல திரண்டு வரும் கருமேகங்கள் லேசான துாறலாக துாவிச் சென்று விடுகிறது.செப்டம்பர் இறுதி, அக்டோபர் துவக்கத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்குவது வழக்கம். சில நாட்களாக காலையில் மேகங்கள் திரள்வதால் வெயில் குறைந்தாலும் வெக்கை குறையவில்லை. மதிய வேளையில் மதுரை நகரை மிரட்டும் வகையில் கார் மேகங்கள் ஆகாயத்தில் கூடி வெப்பத்தை தணிக்கின்றன.

மழையளவு, நீர்மட்டம்

நேற்று முன்தினம் பெய்த மழை அளவு (மி.மீ.,யில்) வருமாறு: மதுரை வடக்கு 9.8, தல்லாகுளம் 12.4, பெரியபட்டி 14.2, விரகனுார் 8, தனியாமங்கலம் 13, மேலுார் 8, புலிப்பட்டி 11.6, சாத்தையாறு அணை 1, மேட்டுப்பட்டி 4.2, திருமங்கலம் 5.4, பேரையூர் 3.2. பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.55 அடி (மொத்த உயரம் 152 அடி), அணையில் 3133 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 427 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.வைகை அணையின் நீர்மட்டம் 55.51 அடி (மொத்தம் 71). அணையில் 2802 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1172 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1199 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.சாத்தையாறு அணையின் நீர்மட்டம் 17.8 அடி. (மொத்தம் 29). அணையில் 21.77 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்தும் இல்லை, அணையில் இருந்து வெளியேற்றப்படவும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை