| ADDED : பிப் 10, 2024 05:19 AM
உசிலம்பட்டி: பேரையூர் தாலுகாவில்பழங்குடியின மக்கள் வசிக்கும் மொக்கத்தான்பாறை பகுதியில் எலிக்காய்ச்சலால் 10 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியருக்கு பாதிப்பு ஏற்பட்டு உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று மாலை கலெக்டர் சங்கீதா மொக்கத்தான்பாறை கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர உத்தரவிட்டார். தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.சுகாதார இணை இயக்குநர் டாக்டர் செல்வராஜ், நிலைய மருத்துவ அலுவலர் மாதவன் குழந்தைகள் நல மருத்துவர் ராதாமணி ஆகியோரிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். எம்.எல்.ஏ., அய்யப்பன், ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், தாசில்தார்கள் உசிலம்பட்டி சுரேஷ் பிரடரிக் கிளமண்ட், பேரையூர் செல்லப்பாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.