கல்லுாரி முதல்வர் அறை முற்றுகை
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி முதல்வர் அறையை தொகுப்பூதிய ஆசிரியர்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு யு.ஜி.சி., வழிகாட்டுதல்படி சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.,12 முதல் பல்கலை கல்லுாரி உறுப்புக் கல்லுாரிகள் கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. நிர்வாகம் சார்பில் பேச்சு வார்த்தை நடத்த முன் வராததால் நேற்று முதல்வர் ஜார்ஜ் அறையை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் உள்ளே அமர்ந்தனர். பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு வாரத்திற்குள் கோரிக்கையை நிறை வேற்ற நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டதாக சங்கத் தலைவர் வெள்ளையன், செயலாளர் பழனிகுமார், பொருளாளர் பிரபாகரன் தெரிவித்தனர்.