எஸ்.ஐ மீது கம்பியால் தாக்கிய கல்லூரி மாணவர்
பேரையூர்: கல்லூரி மாணவரால் கம்பியால் தாக்கப்பட்ட எஸ்ஐ அழகர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.மதுரை மாவட்டம் பேரையூர் கீழத்தெரு அழகர்சாமி மகன் ஹரி 24. இவர் திருமங்கலம் தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் இன்று அதிகாலை 2 மணி அளவில் குடிபோதையில் அவரது தாயாருடன் தகராறு செய்து கொண்டிருந்தார்.அப்போது ரோந்து சென்ற பேரையூர் எஸ்ஐ அழகர் இதை தடுத்தார். அப்போது அருகில் இருந்த கார் கம்பியை பிடுங்கி எஸ்.ஐ தலையில் ஹரி தாக்கினார். இதில் காயமடைந்த எஸ்ஐ அழகர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.