உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாலமேடு பேரூராட்சியில் மரங்கள் கடத்தலா பழுதான வாகனங்களும் மாயம் என புகார்

பாலமேடு பேரூராட்சியில் மரங்கள் கடத்தலா பழுதான வாகனங்களும் மாயம் என புகார்

பாலமேடு: பாலமேடு பேரூராட்சி வளாகத்தில் அனுமதியின்றி புளி, வாகை உள்ளிட்ட மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாகவும், பழுதடைந்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், இரும்புப் பொருட்கள் மாயமானதாக புகார் எழுந்துள்ளது. பாலமேடு மெயின் ரோட்டில் ஆர்.ஐ., அலுவலகம் அருகே பேரூராட்சி வளாகம் உள்ளது. அலுவலக வளாகத்தின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் பேரூராட்சி சுற்றுச்சுவரை இடித்து, அனுமதியின்றி மரங்களை வெட்டிக் கடத்தியுள்ளதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர். தனசேகர் என்பவர் கூறியதாவது: இதே போன்று பேரூராட்சி வளாகத்தில் தண்ணீர் தொட்டி கட்ட சுற்றுச்சுவரை இடித்து தற்போது மீண்டும் புதிதாக கட்டியுள்ளனர். தற்போது பின்பக்க சுவரை 2 இடங்களில் இடித்து மரங்களை வெட்டி அகற்றி உள்ளனர். ரூ.பல லட்சம் மதிப்புள்ள மரம், வாகனம், இரும்பு பொருட்கள் மாயமாகி விட்டது. இதற்கு முறைப்படி ஆவணங்கள் ஏதும் இல்லை. மீண்டும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கென அரசு நிதியை வீணடிக்க உள்ளனர். தனிநபர் ஆதாயத்திற்கு பேரூராட்சி நிர்வாகம் உடந்தையாக உள்ளது. உயிர் மரங்களை வெட்டியது வேதனை அளிக்கிறது. கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். செயல் அலுவலர் சசிகலா கூறுகையில், ''கூட்டத்தில் தீர்மானம் வைத்து வேலைகள் நடக்கிறது. மரத்தை வெட்ட வி.ஏ.ஓ., அனுமதி பெற்றுள்ளோம். டெண்டர் எதுவும் விடவில்லை. பழைய பொருட்களை சுத்தம் செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தவறு ஏதும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை