கல்வியிடை பயிற்சி நிறைவு
மதுரை: மதுரை அரசு மியூசியம் சார்பில் சிவகாசி தி ஸ்டாண்டர்டு பயர் கல்லுாரி முதுநிலை, இளங்கலை வரலாற்றுத் துறை மாணவிகளுக்கான 15 நாட்கள் கல்வியிடை பயிற்சி நடந்தது. மியூசிய காப்பாட்சியர் மருதுபாண்டியன் கூறுகையில்,''மாணவிகளுக்கு கல்வெட்டு கலை, சிற்பம், ஓவியம், மரபுக்கலைகள் கற்றுத்தரப்பட்டன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு களப்பயிற்சியும் தமிழி, வட்டெழுத்து, கிரந்தக் கல்வெட்டு எழுத்துப் பயிற்சி அளிக்கப்பட்டது'' என்றார். நிறைவு விழாவில் மாவட்ட தொல்லியல் அலுவலர் ஆனந்தி சான்றிதழ் வழங்கினார். பயிற்றுநர்கள் உதயகுமார், கிருபாஸ்ரீ பயிற்சி அளித்தனர்.