உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அடிப்படை வசதி செய்யாத பேரூராட்சிக்கு கண்டனம்

அடிப்படை வசதி செய்யாத பேரூராட்சிக்கு கண்டனம்

சோழவந்தான்: 'சோழவந்தான் ஜெனகை நகரில் 15 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்யப்பட வில்லை' எனக்கூறி அப்பகுதியினர் பேரூராட்சியை கண்டித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். அப்பகுதி ரபிக் கூறியதாவது: 17 வது வார்டு ஜெனகை நகரில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் 15 ஆண்டுகளாக ரோடு, சாக்கடை கால்வாய் உட்பட போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. பல தெருக்களில் மண் ரோடுதான் உள்ளது. மேடு, பள்ளமான ரோடால் முதியோர், பெண்கள், குழந்தைகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். சாக்கடை கால்வாய் அமைக்காததால் வீட்டருகிலேயே செப்டிக் டேங்க் அமைத்து கழிவுநீரை தேக்கும் நிலை உள்ளது. மழைக்காலம் ரோடு சேறும் சகதியுமாக மாறி நடக்க முடியாத அளவு மோசமாகிறது. அருகிலுள்ள தேனுார் கால்வாய் துார் வாரப்படாததால் வெளியேறும் நீர் குடியிருப்புக்குள் தேங்கும் நிலை ஏற்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது. இப்பகுதி குழந்தைகள் அடிக்கடி வயிற்று வலி, காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். தேள், பூரான், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டத்தால் விபரீதம் நடக்க வாய்ப்பு உள்ளது. குழந்தைகளை வெளியே அனுப்ப பெற்றோர் அஞ்சுகின்றனர். அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. எனவே போஸ்டர் அடித்து எதிர்ப்பை தெரிவித்தோம். இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை