உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வி.சி.க.,வுக்கு கண்டனம்

வி.சி.க.,வுக்கு கண்டனம்

மதுரை : மதுரையில் ஹிந்து வழக்கறிஞர் முன்னணி சார்பில் அவசர நிர்வாகக்குழு கூட்டம் மாநிலத் துணைத் தலைவர் பரமசிவம் தலைமையில் நடந்தது. மாவட்டத் தலைவர் சேகர், செயலர் பெருமாள் சாமி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். நேற்று முன்தினம் சென்னை பார் கவுன்சில் முன் டூவீலரில் சென்ற வழக்கறிஞர் ராஜிவ் காந்தி மீது வி.சி.க., வினர் நடத்திய கொலை வெறி தாக்குதல் கண்டிக்கத்தக்கது. அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து வழக்கறிஞர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட வழக்கறிஞரின் மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை