உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  திருப்பரங்குன்றம் தீப பிரச்னையை கவனமாக கையாள வேண்டும் அரசிற்கு காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் அறிவுரை

 திருப்பரங்குன்றம் தீப பிரச்னையை கவனமாக கையாள வேண்டும் அரசிற்கு காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் அறிவுரை

திருநகர்: திருப்பரங்குன்றம் தீப பிரச்னையை தமிழக அரசு மிக கவனமாக கையாள வேண்டும். எந்த வகையிலும் பிரச்னைகள் ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு,'' என காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். அவர் கூறியதாவது: விமான சேவைகளில் போட்டி நிறுவனங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தேவையான இடங்களை கையகப்படுத்துதல், அதற்கான நிதியை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசி உள்ளோம். செவிலியர்களின் போராட்டம் நியாயமானது. அவர்களது கோரிக்கைகளை அரசு காது கொடுத்து கேட்க வேண்டும். சுகாதாரத் துறை அமைச்சர் பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும். அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். திருப்பரங்குன்றம் அமைதியாக இருந்து வந்தது. தீப பிரச்னையை வைத்து பா.ஜ.,- ஆர்.எஸ்.எஸ்., பிரச்னை செய்து வருகிறது. தீப பிரச்னையை தமிழக அரசு மிக கவனமாக கையாள வேண்டும். எந்த வகையிலும் பிரச்னைகள் ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு. தீப பிரச்னைக்காக தீக்குளித்தது வருத்தமளிக்கிறது. கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. சிலருக்கு வேற இடத்தில் ஏற்றுவது கோரிக்கையாகவும் ஆசையாகவும் நம்பிக்கையாகவும் இருக்கலாம். இதற்காக உயிர் துறப்பது நியாயம் இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ