உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜி.எஸ்.டி., 2.0 அமல் படுத்துவதற்கு முன் இரண்டு கோரிக்கைகளை பரிசீலிங்க...

ஜி.எஸ்.டி., 2.0 அமல் படுத்துவதற்கு முன் இரண்டு கோரிக்கைகளை பரிசீலிங்க...

மதுரை: 'புதிய ஜி.எஸ்.டி., வரி விகிதங்கள் செப்.,22ல் அமலுக்கு வருவதற்கு முன், 2 கோரிக்கைகளை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பரிசீலிக்க வேண்டும்' என அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேலு வலியுறுத்தினார். அவர் தெரிவித்ததாவது: அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தினசரி பயன்படுத்தும் அரிசி, பருப்பு வகைகள், அவற்றின் மாவு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி.,யில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 'பேக்' செய்யப்பட்ட அதே பொருட்களுக்கு, 25 கிலோ வரை 5 சதவீத வரி தொடர்கிறது. பேக்கிங்கில் உள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் முழு வரி விலக்கு அளிக்க வேண்டும். பேப்பர், அது சார்ந்த பொருட்கள் மாணவர்கள் பயன்படுத்தும் பேப்பர், நோட்டுப் புத்தகங்களுக்கு ஏற்கனவே இருந்த 12 சதவீதத்தில் இருந்து வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் பேப்பர்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே பொருளுக்கு எப்படி 18 சதவீதமும், வரி விலக்கும் அளிக்க முடியும். இதனால் இத்தொழிலில் உள்ள குறு சிறு உற்பத்தியாளர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே பேப்பர், அது சார்ந்த பொருட்களுக்கு 5 சதவீத வரி விதிக்கலாம். இவ்வாறு வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை