உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் கட்டுமானம் பர்னிச்சர் கண்காட்சி

மதுரையில் கட்டுமானம் பர்னிச்சர் கண்காட்சி

மதுரை: மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் பிசினஸ் இந்தியா எக்ஸ்பிஷன் சார்பில் 'கன்ஸ்ட்ரக்டிவ் -2025' கட்டுமானப் பொருட்கள், இன்டிரியர், எக்ஸ்டிரியர், ேஹாம் டெக்கர்ஸ், பர்னிச்சர் கண்காட்சி நடக்கிறது.நவீன கட்டட கலை பொருட்கள், பில்டர்ஸ் அண்ட் புரோமோட்டர்ஸ், கட்டுமான நிறுவனங்கள், தயாரிப்பு நிறுவனங்கள், உள் மற்றும் வெளி அலங்கார பொருட்கள், கம்பிகள், மரக்கதவுகள், பிளைவுட், ஜன்னல்கள், சி.சி.டி.வி., மாடுலர் கிச்சன், சோலார் பேட்டரிஸ், லிப்ட் என பூமி பூஜை முதல் கிரகப் பிரவேசம் வரையிலான அனைத்து தேவைகளுக்குமான அரங்குகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 40 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு.மேலும் வீட்டு கடன் வசதி பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டுமானம் குறித்து நிபுணர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம். அனுமதி இலவசம். சிறப்பு பரிசாக ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான வீட்டு அலங்கார பொருட்கள், பர்னிச்சர்கள் ஒருவருக்கு வழங்கப்பட உள்ளது. இன்றுடன் கண்காட்சி நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி