உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சித்திரைத் திருவிழாவுக்காக கட்டுமானப் பொருட்கள் அகற்றம்: மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில்

சித்திரைத் திருவிழாவுக்காக கட்டுமானப் பொருட்கள் அகற்றம்: மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில்

மதுரை: சித்திரைத் திருவிழா நெருங்குவதைத் தொடர்ந்து மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் பக்தர்கள் நடமாட்டத்திற்கு இடையூறின்றி கட்டுமான பொருட்களை அகற்றும் பணி துவங்கியுள்ளது.மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ரூ.176 கோடி மதிப்பில் மேம்பால பணிகள் நடக்கின்றன. சந்திப்பு பகுதிகளில் துாண்கள், பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியில் மேல்தளம், வைகை ஆற்றுக்குள் துாண்களை இணைப்பது என அறுபது சதவீதப் பணிகள் முடிந்துள்ளது. இந்தப் பகுதியில்தான் மே 12 காலையில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் இறங்குவார் என்பதால் பக்தர்கள் இங்கு லட்சக்கணக்கில் கூடுவர்.இதனால் கட்டுமான பொருட்களால் அவர்களின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதால் அமைச்சர்கள் வேலு, மூர்த்தி, தியாகராஜன், கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் சித்ரா, போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஆகியோர் இடங்களை பார்வையிட்டனர். கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்டப் பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர் சுகுமாறனுக்கு ஆலோசனை வழங்கினர். அதன்படி நேற்று கட்டுமான பொருட்களை அகற்றும் பணி நடந்தது. முதற்கட்டமாக அமெரிக்கன் கல்லுாரி பகுதியில் பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில் பொருட்களை அகற்றியுள்ளனர்.அடுத்து வைகை ஆற்றுக்குள் பாலப் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. மே முதல் வாரம் ஆற்றில் திறந்துவிடப்படும் வைகை அணை நீர் தாராளமாக செல்லும் வகையில் வழி ஏற்படுத்தியும், பக்தர்கள் கள்ளழகரை இடையூறின்றி தரிசிக்கவும் ஏற்பாடு செய்ய உள்ளனர். இப்பணிகள் மே 10ம் தேதி வரை நடைபெறும்.அதன்பின் பணிகள் கள்ளழகர் மலைக்கு திரும்பும் வரை நிறுத்தப்படும். மே 17க்குப் பின்பு பணிகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை