குன்றத்தில் மகா வராகிக்கு புதிய கோயில் கட்டும் பணி
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் தாழம்பூ தெருவில் ஸ்ரீசக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ராஜ சியாமளா மகா வாராகி அம்மன் புதிய கோயில் கட்டும் பணி நடக்கிறது. கோயிலின் மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரம், வராகி, லலிதா பரமேஸ்வரி, ராஜசியாமளா சன்னதிகளில் தனித்தனி விமானங்கள் கட்டப்பட்டுள்ளது. கோயில் கருவறைகளில் உச்சிஷ்ட கணபதி, செந்திலாண்டவர், மகா வராகி, ராஜ சியாமளா, லலிதா பரமேஸ்வரி, பால திரிபுரசுந்தரி, லோபமுத்ரா, காலபைரவர், ரதி மன்மதன், அகஸ்திய முனிவர், முத்து வடுகநாத சித்தர் ஆகியோருக்கு தனித் தனி சன்னதிகள் அமைக்கப்படுகிறது. கோயிலில் இறுதி கட்டடப் பணிகள் நடக்கின்றன. மூலவர்கள் விக்ரகங்களை கருங்கற்களில் வடிவமைத்து, தற்போது சந்தனம் சாத்துப்படி செய்து, சயன கோலத்தில் வைக்கப்பட்டுள்ளது. செப். 11ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விவரங்களுக்கு 99941 41379 ல் தொடர்பு கொள்ளலாம் என ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் அஷ்டவராகி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.