ஒப்பந்ததாரர் முற்றுகை
பேரையூர்: டி.கல்லுப்பட்டி யூனியன் உட்பட்ட பகுதிகளில் கடந்த 2023 ஆம் ஆண்டு தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் ரோடுகள், பாரு கால்கள் பேவர் பிளாக் கற்கள் பதித்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டன. இத்திட்ட பணிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் பில் பாஸ் செய்யப்படவில்லை. மத்திய அரசிடம் இருந்து நிதி வரவேண்டும் மாநில அரசிடம் இருந்து நிதி வரவேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இழுத்தடிக்கின்றனர். 31 ஒப்பந்ததாரர்கள் ரூ 7.61 கோடிக்கு பணி செய்து பணம் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று டி. கல்லுப்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாவட்ட அதிகாரிகள் பேசியதை அடுத்து கலைந்து சென்றனர்.