உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / யாகசாலையில் நுழைய முயற்சி திருப்பரங்குன்றத்தில் சர்ச்சை

யாகசாலையில் நுழைய முயற்சி திருப்பரங்குன்றத்தில் சர்ச்சை

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றத்தில் யாக சாலைக்குள் அனுமதி இன்றி செல்ல முயன்றவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஜூலை 14ல் நடக்கும் கும்பாபிஷேகத்திற்காக நேற்று முன்தினம் யாக சாலை பூஜை துவங்கியது. அப்போது, அங்கு தமிழ் வேத பாடசாலை நிறுவனர் சத்தியபாமா தலைமையில் சிலர், தாங்களும் யாக பூஜையில் பங்கேற்போம் எனக்கூறி யாகசாலைக்குள் செல்ல முயன்றனர்.அவர்களிடம், சிவாச்சாரியார்கள், பாடசாலையில் பூஜைகள் துவங்க உள்ளது; யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை என, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிவாச்சாரியார்களுக்கும், யாகசாலைக்குள் நுழைய முயன்ற பெண்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு பணியில் இருந்த போலீசார், அப்பெண்களை அப்புறப்படுத்தினர்.சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில், அனுமதியின்றி யாகசாலைக்குள் நுழைய முயன்றதாக சத்தியபாமா உட்பட சிலர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தியபாமாவும் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
ஜூலை 12, 2025 05:28

அருமுகம் சாலை - விதத்தாகுளம் சாலை முதல் மதுரை விமான நிலையம் வரை உள்ள சாலையில் உயிருக்கு ஆபத்தான குழிகள் மற்றும் தூசித் தொற்றுகள் தொடர்பான அவசர புகார் மாண்புமிகு தலைவர் அவர்களுக்கு, மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியை சேர்ந்த குடிமக்கள் மற்றும் வியாபாரிகளின் சார்பாக, கீழ்க்காணும் பொதுசுகாதார மற்றும் சாலை பாதுகாப்பு சம்பந்தப்பட்ட முக்கிய புகாரை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அருமுகம் சாலை - விதத்தாகுளம் சாலை முதல் மதுரை விமான நிலையம் வரை, மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி மன்றத்தினர் கூட்டுறவு இல்லாமல், பாடில் ரயில் தொழிற்சாலையிலிருந்து கழிவுப் பொருட்களை கொண்டுவந்து, சாலையின் சேதமடைந்த பகுதிகளில் அவசர சாலைக்கூட்டங்களைச் செய்யும் பெயரில் கொட்டுகிறார்கள். இதனால்: • மிக அதிகமான தூசு வெளியேறி, சுற்றுப்புற மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் மற்றும் பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. • வணிகர்கள் கடைகளுக்குள் தூசி புகுந்து, உணவுப் பொருட்கள் தூசால் மாசுபட்டு, சுகாதாரத்துக்கு எதிரான சூழ்நிலை உருவாகியுள்ளது. • சாலையில் உருவான பாதுகாப்பற்ற குழிகள் “உயிர் குழிகள்”, ஏற்கனவே பல மோட்டார் வாகன ஓட்டுநர்கள், பைக்கர்கள் மற்றும் பொதுமக்கள் மீது விபத்து ஏற்பட காரணமாகியுள்ளது. இந்த நிலையில், ஏதேனும் உயிரிழப்பு அல்லது கடுமையான விபத்துகள் நிகழ்ந்தால், அதற்கான முழுப்பொறுப்பும் திருமங்கலம் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கே உரியது என்பதை தாங்கள் கவனிக்க வேண்டும். எனவே, கீழ்காணும் நடவடிக்கைகளை தாங்கள் உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்: 1. தொழிற்சாலை கழிவுகளை அல்லது ரயில்வே கழிவுகளை சாலையில் கொட்டுவதை உடனடியாக நிறுத்தவும். 2. சாலைகளில் நடைபெறும் அசாதாரண சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்யவும். 3. பொதுப்பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப முறையான சாலை பழுதுபார்ப்பு மற்றும் தரமான ரோட்பேவர்களை மட்டும் பயன்படுத்தவும். 4. தூசி கட்டுப்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும். 5. பொதுமக்களின் உயிருக்கும் உடலுக்கும் ஆபத்து ஏற்படுத்திய பொறுப்பற்ற அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை