மேலும் செய்திகள்
நெருக்கடியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம்
23-Sep-2025
மேலுார்: கருங்காலக்குடியில் நிதி ஒதுக்காததால் கூட்டுறவு சொசைட்டி பணிகள் பாதியில் நிற்பதாக கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினர் மீது புகார் எழுந்துள்ளது. கருங்காலக்குடி - சிங்கம்புணரி ரோட்டில் கோடவுன் அருகில் கூட்டுறவு சொசைட்டி அலுவலகம் கட்டும் பணி பல ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. தற்போது வாடகை கட்டடத்தில் செயல்படும் அலுவலகத்தில் கருங்காலக்குடி, திருச்சுனை, சுக்காம்பட்டி உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தினர் தங்கள் நகைக்கடன், உரம், விவசாயம், கால்நடை, பயிர் கடன், பயிர் காப்பீடு, விதைகள் வாங்க இங்கு வந்து செல்கின்றனர். இவ் அலுவலகத்தில் போதிய அடிப்படை வசதி இல்லாததால் பெரிதும் அவதிப்படுகின்றனர். அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: கூட்டுறவு சொசைட்டி அலுவலகம் ஓரிடத்திலும், கோடவுன் மற்றொரு இடத்திலும் இருப்பதால் விவசாயிகள் அவதிப்படுகிறோம். ரூ. 25 லட்சம் மதிப்பில் பல ஆண்டுக்கு முன் கட்டத் துவங்கிய அலுவலகத்தை இதுவரை முடிக்காததால் புதர் மண்டி விஷப் பூச்சிகளின் கூடாரமாகிவிட்டது. கட்டடம் வலுவிழப்பதால் மக்கள் வரிப்பணமும் வீணாகிகிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர். கூட்டுறவு அதிகாரிகள் கூறுகையில், அலுவலகம் கட்டுமானப்பணிகள் துவங்கி 2 வருடம் ஆகிறது. நிதி ஒதுக்குவதை பொறுத்து கட்டடம் வளர்ந்துவருகிறது. நிதிமுழுவதுமாக நீக்கி ஒதுக்கியதும் அலுவலகம் கட்டி முடிக்கப்படும் என்றனர்.
23-Sep-2025