உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தெரு மாடுகளுக்கு ரூ.48 லட்சத்தில் காப்பகம்; மாநகராட்சி ஏற்பாடு

 தெரு மாடுகளுக்கு ரூ.48 லட்சத்தில் காப்பகம்; மாநகராட்சி ஏற்பாடு

மதுரை: மதுரை பெத்தானியாபுரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.48 லட்சத்தில் தெருவில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு காப்பகம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. மாநகராட்சி வார்டுகளில் ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாவது, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற பிரச்னைகள் எழுகின்றன. இதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி கமிஷனர் சித்ரா முயற்சியில் தமிழக மாநகராட்சிகளில் முதன் முறையாக மதுரையில் காப்பகம் அமைக்க ஏற்பாடு செய்தார். இதன்படி 64 வது வார்டில் ரூ.48 லட்சத்தில் கட்டப்பட உள்ள காப்பகத்திற்கான பூமிபூஜை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் காமராஜ் தலைமையில் நடந்தது. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா முன்னிலை வகித்தார். உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் சரவணக்குமார் பங்கேற்றனர். ஒரே நேரத்தில் 120 மாடுகளை பாதுகாக்கும் வகையிலும், மாடுகளுக்கான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இக்காப்பகம் அமைகிறது. சோலைராஜா கூறுகையில், கோரிக்கை வைத்தவுடன் அதற்காக கமிஷனர் சித்ரா உரிய நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுத்தார். இங்கு அமையும் காப்பகம் இப்பகுதியின் 10 வார்டுகளுக்கும் பயன்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை