உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநகராட்சி முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

மாநகராட்சி முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

மதுரை : தஞ்சாவூர் மாநகராட்சியில் குப்பைகளை அகற்றும்பணியில் முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்துள்ளது. வழக்கு பதிவு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை கமிஷனர் முடிவெடுக்க வேண்டும் என அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.தஞ்சாவூர் கோவிந்தராஜூ தாக்கல் செய்த மனு:தஞ்சாவூர் மாநகராட்சியில் குப்பைகளை அகற்றும் பணியில் ரூ.10.60 கோடி முறைகேடு நடந்துஉள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், எஸ்.பி.,க்கு புகார் அனுப்பினேன். விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.அரசு தரப்பு: புகார் பெறப்பட்டது. ஊழல் தடுப்புச் சட்டப்படி சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து அனுமதி பெறப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறு செய்துள்ளதற்கு முகாந்திரம் உள்ளதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. விரிவான அறிக்கையுடன் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வழக்கமான வழக்கு பதிவு செய்வது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை கமிஷனர் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தது.இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை