உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நஷ்டத்தில் பருத்தி விவசாயிகள்

நஷ்டத்தில் பருத்தி விவசாயிகள்

பேரையூர் : பேரையூர் தாலுகாவில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கடந்தாண்டு பயிரிடப்பட்ட பருத்தி மழையின்றி வளர்ச்சி குன்றியது. அடுத்தடுத்து பெய்த மழையால் நிலத்தில் தண்ணீர் தேங்கி செவட்டை நோய் தாக்கியது.இதனால் மகசூல் பாதித்தது. விலையும் குறைவாக இருக்கிறது. தற்போதைய பருத்தி விலை கிலோ ரூ.60க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. பறிக்கும் கூலிக்கு மட்டும் கிலோவுக்கு ரூ.45 வீதம் நாள் ஒன்றுக்கு 5 கிலோ தான் பறிப்பர்.மருந்து விலை உயர்வு, போக்குவரத்தை செலவு உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு பருத்தி நடவு செய்த விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.காப்பீடு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ