கவுன்சிலர்கள் புறக்கணிப்பு: மர்மக்காய்ச்சல் மர்மம்
திருமங்கலம்: திருமங்கலத்தில் நேற்று நகராட்சி கூட்டம் தலைவர் ரம்யா தலைமையில் நடந்தது. அ.தி.மு.க.,வினர் ஒருவர் கூட கூட்டத்திற்கு வரவில்லை. போதிய உறுப்பினர்கள் வராததால் கூட்டம் நடக்கவில்லை. கவுன்சிலர்களின் அலைபேசி 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நகராட்சி பழைய அலுவலக வாயிலில் 27 கடைகளைக் கொண்ட புதிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில் கவுன்சிலர்கள் ஆளுக்கு ஒன்றாக கேட்டனர். கடைகளை ஒதுக்க நிர்வாகிகளை 'கவனிக்க' வேண்டும் என கூறப்பட்டது. அதிருப்தி அடைந்த கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்' என்றனர். கவுன்சிலர்கள் தரப்போ, மர்மக்காய்ச்சலால் பங்கேற்கவில்லை என்றனர்.