மேலும் செய்திகள்
நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
23-Oct-2025
மேலுார்: மேலுார் ஒருபோக பாசன பகுதி கால்வாயில் நீர்வளத் துறையினர் முன்னறிவிப்பின்றி அதிகளவு தண்ணீர் திறந்தனர். அதனால் அ. வல்லாளபட்டி 47வது மடை பகுதி வயல்களில் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் ஏராளமான விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நீர்வளத் துறையினர் நீரின் அளவை குறைத்ததால் வயலில் நிறைந்திருந்த தண்ணீர் வெளியேறி நெற்பயிர்கள் பாதுகாக்கப்பட்டது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
23-Oct-2025