உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  காட்டுப்பன்றி, மான்களால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

 காட்டுப்பன்றி, மான்களால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

பேரையூர்: பேரையூர் பகுதியில் காட்டுப்பன்றி, மான்களால் தொடர்ந்து பருத்தி, மக்காச்சோள பயிர்கள் சேதமாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பருத்தி, மக்காச்சோள பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளன. இந்நிலையில் இப்பகுதி கண்மாய்களில் பதுங்கியுள்ள காட்டுப்பன்றிகள் இரவில் கூட்டம் கூட்டமாக பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதேபோல் பகலில் மான்கள் கூட்டம் கூட்டமாக விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மேய்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் கவலை அடைந்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ''வனத்துறையினர் காட்டுப் பன்றிகளை சுட்டுப் பிடிக்க வேண்டும். மான்களை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை