உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜன. 4ல் சைக்கிள் போட்டி

ஜன. 4ல் சைக்கிள் போட்டி

மதுரை: அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு ஜன. 4 காலை 6:30 மணிக்கு மதுரை தெப்பக்குளம் அய்யநாடார் ஜெயலட்சுமி பள்ளியில் ஜன. 4 காலை 6:30 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி நடக்கிறது. அன்று காலை 6:00 மணிக்கு பள்ளிக்கு நேரில் வர வேண்டும்.13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 மற்றும் 17 வயது மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., துாரத்திற்கான போட்டி நடைபெறும். சாதாரண சைக்கிளை மட்டும் பயன்படுத்த வேண்டும். தலைமையாசிரியர் அல்லது முதல்வரிடம் வயது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதனுடன் ஆதார் கார்டு, பள்ளி அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000, 4 முதல் பத்தாவது இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை