உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இருளில் மூழ்கிய தாதம்பட்டி மயானம்

இருளில் மூழ்கிய தாதம்பட்டி மயானம்

வாடிப்பட்டி : வாடிப்பட்டி பேரூராட்சி மயானத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால் இறுதிச் சடங்கு செய்ய மக்கள் சிரமப்படுகின்றனர்.இந்த மயானத்தில் தாதம்பட்டி, நீரேத்தானுக்கு 2 தகன மேடைகள் உள்ளன. நுழைவு பகுதி மின் கம்பத்தில் உள்ள மின் விளக்கு மட்டுமே எரிகிறது. தகன மேடை பகுதிகளில் வெளிச்சம் இல்லை.இதனால் இரவில் இறுதிச் சடங்குகளுக்கு வருபவர்கள் கையில் டார்ச் லைட், அலைபேசி டார்ச் மூலம் சடங்கு செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். விஷ பூச்சிகள் அச்சம் உள்ளதால் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக்: பழுதான மின்விளக்குகள் மாற்றி அமைக்கப்பட்டன. கூடுதல் விளக்குகள் அமைக்கப்படும். தண்ணீர் தேவைக்கு குளியல் தொட்டி கட்டப்பட்டு வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை