உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சேதமடைந்த நடைபாதை

சேதமடைந்த நடைபாதை

அலங்காநல்லுார் : அலங்காநல்லுாரில் நடைபாதையில் உடைந்த சிலாப்புகளால் அவ்வழியாக செல்லும் கிராமமக்கள் விழுந்து காயமடையும் அபாய நிலை உள்ளது.அலங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டின் பின்புறம் உள்ள கல்லணை கிராம மக்கள் பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல பக்கவாட்டு பகுதியில் உள்ள வாய்க்கால் சிமென்ட் சிலாப்புகளை நடைபாதையாக பயன்படுத்தி வருகின்றனர். கல்லணை பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் வாய்க்காலை மூடி அமைத்த சிலாப்புகள் ஆங்காங்கே உடைந்துள்ளன. இதனால் இவ்வழியாக வந்து செல்லும் கிராம மக்கள் பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். உடைந்த சிலாப்புகளை சீரமைக்க பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி