உள்ளூர் செய்திகள்

ஆபத்து பள்ளம்

பேரையூர்: பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி ஒன்றியம் எஸ்.அரசபட்டியில் ரோட்டின் நடுவே கட்டிய சிறிய பாலம் உடைந்து போனதால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் சாக்கடையை சரிவர துார்வாராததால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. அதனால் கொசுக்கடி அதிகரித்துள்ளது. இதன் விளைவாக மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பலர் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். ஒன்றிய அலுவலர்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதியினர் கவலை தெரிவித்தனர். டி. கல்லுப்பட்டி ஒன்றிய அலுவலர்கள் உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !