தடுப்புச் சுவரில்லா அபாயகரமான பாலம்
வாடிப்பட்டி: அலங்காநல்லுார் அருகே பெரியாறு பாசன கால்வாயில் தடுப்புச் சுவர் இல்லாத அபாய பாலத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இங்குள்ள அரசு ஆண்கள், பெண்கள் பள்ளிகள், நகர் பகுதிக்கு குறவன்குளம் கிராமத்தினர் இப்பாலத்தை கடந்து செல்கின்றனர். டூவீலர் மட்டுமே செல்லும் அளவிலான பழமையான பாலத்தின் தடுப்புச் சுவர் பல ஆண்டுகளுக்கு முன்பே பெயர்ந்து விழுந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ள இப்பழமை பாலத்தை அகற்றி புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.