மேலும் செய்திகள்
ஆபத்தான நிலையில் அரசு பள்ளி
03-Aug-2025
சோழவந்தான்; சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரத்தில் மேல்நிலைக் குடிநீர் தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இப்பகுதியில் பல ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகளாகிறது. தற்போது தொட்டியின் நான்கு துாண்களும், குறுக்கு பீம்களும் சேதமடைந்துள்ளன. காரை பெயர்ந்து கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரியும் நிலை உள்ளது. மேலும் தொட்டியைச் சுற்றிலும் செடி, கொடிகள் முளைத்து புதர் போன்று காட்சியளிக்கிறது. விபரீதம் விளைவதற்கு முன் ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
03-Aug-2025