உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரேஷன் விவரம் வெளியிட முடிவு

ரேஷன் விவரம் வெளியிட முடிவு

மதுரை : மதுரையில் பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாநில நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மாநிலத் தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் முன்னிலை வகித்தார். எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. தமிழக ரேஷன் கடைகளில், 'கரீப் கல்யாண் யோஜனா' திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டில் உள்ளவர்களுக்கு கார்டு ஒன்றுக்கு வழங்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விவரங்களை விழிப்புணர்வு பலகையில் மாதந்தோறும் எழுதி வைக்க திட்டமிடப்பட்டது. 3 கடைகளுக்கு ஒரு பொறுப்பாளரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை