உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சோழவந்தானில் நலிந்த தென்னங்கிடுகு தொழில்

சோழவந்தானில் நலிந்த தென்னங்கிடுகு தொழில்

சோழவந்தான் : சோழவந்தான், குருவித்துறை, துவரிமான் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகம் நடக்கிறது. இன்றைய நவீன காலத்தில் ஆஸ்பெட்டாஸ், தகர ஷீட், துணியால் ஆன ஷாமியானா பந்தல் பயன்பாடு அதிகரிப்பால் தென்னை, பனை கிடுகுகளின் பயன்பாடு குறைந்து விட்டது. கைவினைப் பொருட்கள், கிடுகு, தட்டிகள் தயாரிப்பும், வருவாயும் குறைந்துள்ளதாக சோழவந்தான் பகுதி தொழிலாளர்கள் தெரிவித்தனர். அதேபோல விசிறி, தட்டிகள் உட்பட பல பொருட்கள் பிளாஸ்டிக் தயாரிப்பு வருகையால் மவுசு குறைந்துவிட்டது.இரும்பாடி நாகு கூறுகையில், ''வெயில் காலங்களில் கிடுகு அதிகம் விற்பனையாகும். மழைக் காலத்தில் குறைவு தான். ஆனாலும் வேலை தொடர்ந்து இருக்கும். ஒரு நாளைக்கு 100 கிடுகு பின்னுவேன் ரூ.140 கூலியாகக் கிடைக்கும். விசிறி பின்ன தெரியாது. தற்போது யாரும் விரும்பிக் கேட்பதும் இல்லை. இத்தொழிலில் வருமானம் குறைந்து விட்டதால் யாரும் விரும்புவதில்லை'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ